"பட்டாசுகள் வெடிக்க விதிக்கப்பட்ட தடை டெல்லிக்கு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்" - உச்சநீதிமன்றம்
பட்டாசுகள் வெடிக்க விதிக்கப்பட்ட தடை டெல்லிக்கு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பட்டாசுகளில் பேரியம் உப்பு மற்றும் மாசு ஏற்படுத்தக்கூடிய சில ரசாயனங்கள் கலக்கப்படுவதால் காற்றின் மாசு அதிகரிக்கிறது. இது தொடர்பான ஒரு வழக்கில் மாசு ஏற்படுத்தாத பசுமைப் பட்டாசுகள் மட்டும் தான் டெல்லியில் வெடிக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறப்பட்ட தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடியது தான் என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்தக் காலத்தில் சிறுவர்கள் அதிகமாக பட்டாசுகளை வெடிப்பது இல்லை என்றும் பெரியவர்கள்தான் பட்டாசுகளை வெடிக்கிறார்கள் என்றும் கருத்து தெரிவித்த நீதிமன்றம் பெரியவர்கள் பொறுப்போடு நடந்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
Comments