அமெரிக்க அமைச்சர்கள் பிளிங்கென், லாயிட் ஆஸ்டின் ஆகிய இருவரும் நாளை டெல்லி வருகை..!
அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென், பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் இருவரும் நாளை டெல்லிக்கு வருகின்றனர்.
அமெரிக்க அமைச்சர்கள் வருகையை ஒட்டி பாதுகாப்பு முன் எச்சரிக்கையாக சிறிது நேரம் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் பறப்பது நிறுத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற உள்ள இரண்டு நாள் பேச்சுவார்த்தைகளில் அவர்கள் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசிக்க உள்ளனர்.
இருதரப்பு பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments