காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போதெல்லாம் தீவிரவாதமும், நக்சல்வாதமும் தலை தூக்கியதாக பிரதமர் மோடி
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போதெல்லாம் தீவிரவாதமும், நக்சல்வாதமும் தலை தூக்கியதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
சத்தீஸ்கரில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் சூரஜ்பூரில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் பழங்குடி மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டதாக கூறினார்.
பழங்குடி மக்களுக்கு செலவு செய்வது வீண் என்று காங்கிரஸ் கட்சி கருதியதாக வும், ஆங்கிலத்தை புரிந்து கொள்பவர்கள் மட்டுமே மருத்துவர்களாகும் வகையில் சட்டத்தை ஏற்படுத்தி ஏழைகளும் ஆதிவாசி மக்களும் மருத்துவர்கள் ஆவதை காங்கிரஸ் தடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மஹாதேவ் சூதாட்ட செயலி விவகாரத்தில் காங்கிரசாருக்கு தொடர்பிருப்பதாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், இளைஞர்கள் பந்தயம் கட்டுவதையும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதையும், காங்கிரஸ் ஊக்குவித்ததாகவும் தெரிவித்தார்.
Comments