தீபாவளியன்று காலை 6-7 மணி, மாலை 7-8 மணி வரையில் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என காவல்துறை அறிவுறுத்தல்
தீபாவளியன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது.
அதில், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி காலை 6 முதல் ஏழு மணி வரையிலும் இரவு ஏழு முதல் 8 மணி வரையில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதியின் படி 125 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்கக் கூடாது எனவும், பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்கப்படவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments