60 நாட்கள் அயோத்திக்கு இலவசமாக சென்று வர ஏற்பாடு... தமிழக மக்கள் சென்று வரும் செலவை பா.ஜ.க.வே ஏற்கும் - அண்ணாமலை
ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ஆம் தேதி முடிந்த பின் அடுத்த 60 நாட்களுக்கு தமிழக மக்கள் இலவசமாக ரயிலில் அயோத்தி சென்று ராமரை தரிசித்து வரலாம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இதற்கான முழு செலவையும் தமிழக பா.ஜ.க. ஏற்கும் என்றும் புதுக்கோட்டையில் என் மண், என் மக்கள் பயணத்தின் போது பேசிய அவர் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டு நகர்ப்புற மக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுவதாக குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, இந்தியாவில் ஏழை என்ற ஜாதியே இல்லாமல் செய்வதற்காக 9 ஆண்டு காலமாக பிரதமர் மோடி பாடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புதுக்கோட்டையில் கொட்டும் மழையில் அண்ணாமலை சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபயணம் மேற்கொண்டார். நடைபயணத்தின் இடையே தமக்கு பரிசாக வந்த ஆட்டுக் குட்டி ஒன்றுக்கு சிவகாமி அம்மாள் என்று பெயர் சூட்டி அப்பகுதியைச் சேர்ந்த ஏழைப் பெண் ஒருவருக்கு அண்ணாமலை வழங்கினார்.
Comments