காசா- இஸ்ரேல் விவகாரம் குறித்து ஈரானிய அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
காசாவில் தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடியும், ஈரான் அதிபர் சையது இப்ராகிம் ரைசியும் மேற்கு ஆசிய நிலவரம் குறித்து தொலைபேசியில் விவாதித்தனர்.
அப்போது தீவிரவாத சம்பவங்கள், வன்முறை, பொதுமக்கள் உயிரிழப்பு குறித்து பிரதமர் மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்ததார். மேலும் இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான மோதல் மற்றும் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காசாவில் தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்து, அமைதியை நிலை நாட்டுவதற்கான நடடிவடிக்கைள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்- பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை ஈரான் அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments