நாகலாந்து நாய்க்கறி பேச்சு..! ஆளுநர் கண்டனத்துக்கு ஆர்.எஸ். பாரதியின் விளக்கம்!!
நாகலாந்து நாய்க்கறி பேச்சு விவகாரத்தில் ஆளுநர் தனது பேச்சை முழுமையாகக் கேட்காமல் கண்டனம் தெரிவித்திருப்பதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே சனிக்கிழமையன்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ். பாரதி, ஆளுநர் குறித்து சில விமர்சனங்களை முன்வைத்தார்.
ஆர்.எஸ். பாரதியின் கருத்துக்கு எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்திருந்த ஆளுநர், துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்க நாகர் இனத்தவரை நாய்க்கறி உண்பவர்கள் என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது என்று கூறியிருந்தார்.
மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என்று ஆர்.எஸ். பாரதியை வலியுறுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், நாகாலாந்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி இருந்த காலகட்டத்தில் நாய் கறிக்கு தடை விதிக்கப்பட்டதால் அம்மாநில மக்கள் அவரை விரட்டி அடித்ததாகவே தாம் தெரிவித்ததாக ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
தமிழுக்காக பங்காற்றிய கால்டுவெல் புலவர் பற்றி ஆளுநர் தவறாகப் பேசுவதாகக் குறிப்பிட்ட ஆர்.எஸ்.பாரதி, கழுதைக்குக் கற்பூர வாசனை தெரியாதது போல, கால்டுவெல் பற்றி ஆளுநருக்குத் தெரியவில்லை என்றார்.
Comments