ஐ.ஐ.டி., மெட்ராஸின் புதிய வளாகம் தான்சானியாவில் தொடக்கம்
கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் ஐஐடி மெட்ராஸின் புதிய வளாகம் தொடங்கப்பட்டுள்ளது.
ஸான்ஸிபாரில் அந்நாட்டு அரசின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஐஐடி வளாகத்தை அந்த பிரதேச அதிபர் ஹுஸைன் அலி மின்யி திறந்து வைத்தார்.
திறப்பு விழாவில் காணொளி வாயிலாக பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் காமகோடி, நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த உச்சநீதி மன்றத்திற்கும், ஐ.ஐ.டி மெட்ராஸுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நீதிபதிகள் எந்த மொழியில் தீர்ப்புகளை வாசித்தாலும் வாதிகள் அவரவர் மொழிகளில் நேரலையில் கேட்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தப்படுத்தவும் ஆய்வு நடைபெற்றுவருவதாக அவர் தெரிவித்தார்.
மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க, மெட்ராஸ் ஐ.ஐ.டி-யில், வார இறுதி நாட்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Comments