நாகாலாந்து மக்களை பற்றி தாம் உயர்வாக பேசியதை ஆளுநர் ஆர்.என்.ரவி திரித்து பேசுவதாக ஆர்எஸ் பாரதி குற்றச்சாட்டு...
ஆளுநர் தனது பேச்சை முழுமையாகக் கேட்காமல் கண்டனம் தெரிவித்திருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
நாகாலாந்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி இருந்த காலகட்டத்தில் நாய் கறிக்கு தடை விதிக்கப்பட்டதால் அம்மாநில மக்கள் அவரை விரட்டி அடித்ததாகவே தாம் தெரிவித்ததாக குறிப்பிட்ட ஆர்.எஸ். பாரதி, விடுதலை போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்க கூடாது என்பது போன்ற பல்வேறு தவறுகளை தமிழ்நாட்டிலும் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ் மக்கள் வீரத்துடன் விரட்டி அடிக்க வேண்டும் என தாம் பேசியது எப்படி தவறாகும் என வினவினார்.
தாம் பேசிய 8 மணி நேரத்தில் அதற்குப் பதில் சொல்லும் ஆளுநர், தமிழக அரசு அனுப்பி வைக்கும் கோப்புகளை எல்லாம் தூங்க வைத்துள்ளதாக ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினார்.
தமிழுக்காக பங்காற்றிய கால்டுவெல் புலவர் பற்றி ஆளுநர் தவறாகப் பேசுவதாகக் குறிப்பிட்ட ஆர்.எஸ்.பாரதி, கழுதைக்குக் கற்பூர வாசனை தெரியாதது போல, கால்டுவெல் பற்றி ஆளுநருக்குத் தெரியவில்லை என்றார்.
Comments