மது போதையில் காரை ஓட்டி விபத்து.. அபராதத்திற்கு அஞ்சி போக்கு காட்டிய மதுப்பிரியர்..!
திண்டிவனம் அருகே மது போதையில் காரை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய ஆந்திர ஆசாமி, போலீசாரின் DD சோதனையின்போது, அபராதத்திற்கு அஞ்சிய அந்த நபர் Breath Analyser-ல் சரியாக ஊத மறுத்து போக்கு காட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த வம்சி என்பவர் அவரது நண்பரின் திருமணத்தை முன்னிட்டு போட்டோ ஷூட் எடுப்பதற்காக திருமண ஜோடிகளை அழைத்துக் கொண்டு நண்பர்கள் சிலருடன் காரில் புதுச்சேரி வந்துள்ளார். போட்டோ ஷூட் முடிந்து, மதுபோதையில் காரை ஓட்டி சென்ற வம்சி திண்டிவனம் அருகே விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்த தப்பி செல்ல முயன்ற வம்சியை பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திண்டிவனம் போலீசார் பொதுமக்களிடமிருந்து வம்சியை மீட்டு காவல் நிலையம் அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது பொது மக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து வம்சியை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார் அவர் ஓட்டி வந்த காரையும் எடுத்து சென்றனர். தொடர்ந்து அங்கு Breath Analyser கருவி உதவியுடன் வம்சியிடம் போலீசார் குடி தொடர்பான பரிசோதனையை மேற்கொண்டனர். அப்போது அபராதத்திற்கு அஞ்சிய வம்சி போலீசாரின் மது சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளார். இறுதியில் ஒரு வழியாக வம்சியிடம் DDக்கான Breath Analyser சோதனை போலீசார் முடித்தனர்.
இதற்கிடையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments