தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் தனது பிறந்தநாளில் 49ஆவது சதம் அடித்து சச்சின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி

0 3634

கொல்கத்தாவில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட்டில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 49-வது ஒருநாள் சதத்தை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டதுடன், சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.

தனது பிறந்த நாளில் தேசத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கோலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். விராட் கோலிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமது கணவர் கோலிக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு என்று அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா கூறியுள்ளார்.

தமது சாதனை குறித்து கருத்து தெரிவித்த விராட் கோலி சச்சினின் சாதனையை தாம் சமன் செயதாலும் அவர் தம்மை விட உயர்ந்தவர் என கூறினார். சரியான முறையில் பேட்டிங் செய்வதே தம்முடைய பணி என்றும் அவர் தெரிவித்தார்.

வெற்றி களிப்பில் கோலி மைதானத்தில் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவின் 'ஐன்வாய் ஐன்வாய்' பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments