சிவில் நீதிபதி பதவிகளுக்கான தேர்வில் குளறுபடி என தேர்வர்கள் புகார் - குளறுபடி ஏதும் இல்லை என டிஎன்பிஎஸ்சி விளக்கம்

0 2202
சிவில் நீதிபதி பதவிகளுக்கான தேர்வில் குளறுபடி என தேர்வர்கள் புகார் - குளறுபடி ஏதும் இல்லை என டிஎன்பிஎஸ்சி விளக்கம்

சென்னையில் நடைபெற்ற சிவில் நீதிபதி பதவிகளுக்கான தேர்வின் போது வினாத்தாளில் குளறுபடி இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்த நிலையில், குளறுபடி ஏதும் இல்லை என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

சிவில் நீதிபதி பதவிகளில் உள்ள 245 காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் சென்னையில் உள்ள 25 மையங்களில் முதன்மைத் தேர்வு நடைபெற்றது. காலையில் சட்டம் 2-ம் தாள் தேர்வும், மதியம் 3-ம் தாள் தேர்வும் நடை பெற்றது. சட்டம் இரண்டாம் தாளில் சிவில் சட்டம் குறித்த பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் எனவும் சட்டம் மூன்றாம் தாளில் கிரிமினல் சட்டம் குறித்த பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் எனவும் பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் இன்று காலை நடைபெற்ற தேர்வில் தேர்வர்ளுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் சிவில் சட்ட பகுதியில் இருந்து கேட்கப்படாமல் கிரிமினல் சட்ட பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி., உயர்நீதிமன்றம் தயாரித்துக் கொடுத்த வினாத்தாள்கள் தான் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், உயர்நீதிமன்ற பதிவாளரிடம் தேர்வர்களின் புகார் குறித்து தெரிவித்தபோது, வினாத்தாளில் குளறுபடிகள் இல்லை தேர்வை தொடர்ந்து நடத்தலாம் என அவர் கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments