காற்று மாசு காரணமாக டெல்லியில் தொடக்கப் பள்ளிகளுக்கு நவ.10 வரை விடுமுறை
டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு நவம்பர் 10-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில கல்வி அமைச்சர் அதிஷி தெரிவித்தார்.
6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். டெல்லியில் தொடர்ந்து நான்காவது நாளாக காற்று மாசின் குறியீடு 400-க்கும் அதிகமாக தீவிரம் என்ற அளவில் இருக்கும் நிலையில், காற்று மாசைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அண்டை மாநிலங்களில் இருந்து பிஎஸ்-6 கார்பன் உமிழ்வு விதிமுறைகளைப் பின்பற்றாத வாகனங்களை டெல்லிக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தில் பயிர்க் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால்தான் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments