சாராய ஆலை நடத்த வேண்டிய கட்டாயம் பா.ஜ.க.வினருக்கு இல்லை - அண்ணாமலை

0 3481

100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுவோருக்காக மத்திய அரசு நேற்று 10 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி இருப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

கரூர் கிருஷ்ணராயபுரத்தில் 53-வது நாள் என் மண், என் மக்கள் யாத்திரையை மேற்கொண்ட அவர், தீபாவளிக்கு முன்பாக 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு பணம் வங்கியில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது பா.ஜ.க. மட்டுமே என்று தெரிவித்துள்ள அண்ணாமலை, சாராய ஆலை நடத்த வேண்டிய கட்டாயம் தங்களுக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, கரூர் உப்பிடமங்களத்தில் யாத்திரை சென்ற அண்ணாமலைக்கு செண்டை மேளம் வாசித்து பா.ஜ.க. தொண்டர்கள் வரவேற்பளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments