4-சி களில் இயங்குகிறது காங்கிரஸ்... மத்தியப்பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா குற்றச்சாட்டு

0 1184

Corruption, Commission, Communal riots, Criminal politics என்ற 4 C க்களின் மீது காங்கிரஸ் கட்சி இயங்கிக் கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், மாநிலத்தின் வளர்ச்சிக்கு 4c க்களில் இருந்து மாநிலத்தை வெளியே கொண்டு வருவது அவசியம் என்று குறிப்பிட்டார்.

அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியான அம்பேத்காரை காங்கிரஸ் கட்சி வாழ்நாள் முழுவதும் அவமதித்ததாகக் கூறிய அமித்ஷா, அம்பேத்கரை வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு கட்சியாவது அவமதித்திருந்தால் அது காங்கிரஸ் கட்சிதான் என்றும், ஆட்சியில் இருந்தவரை பாரத ரத்னா விருது வழங்க அக்கட்சி அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments