சந்திரயானை சூழ்ந்த கிரகணம்.. தலைவர் பதவிக்கு சண்டை .. சுயசரிதையா? புருடா புராணமா ? இஸ்ரோ சிவன் vs சோம் நாத்

0 2855

இஸ்ரோ தலைவராக தான் வருவதை இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே. சிவன் தடுத்ததாக தற்போதைய தலைவர் சோம்நாத் சுயசரிதை புத்தகத்தில் குற்றம் சாட்டியுள்ள நிலையில் அவரது சுயசரிதை தான் படிக்க வில்லை என்று சிவன் மறுத்துள்ளார்

சந்திராயன் 3 வெற்றிக்கரமாக ஏவப்பட்டதால் உலகம் முழுக்க பிரபலமானார் இஸ்ரோ தலைவரான கேரளாவை சேர்ந்த சோம்நாத்.

இவருக்கு முன்னதாக தமிழகத்தை சேர்ந்த கே.சிவன் இஸ்ரோ தலைவராக இருந்த போது ஏவப்பட்ட சந்தியான் 2 திட்டம் இலக்கை அடையவில்லை.

இந்த நிலையில், சோம்நாத் 'Nilavu Kudicha Simhangal என்ற பெயரில் தனது வாழ்க்கை வரலாற்று புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. சிவன் தலைமையில் சந்திராயன் திட்டம் 2 தோல்வியடைந்ததற்கு பல காரணங்களை கூறியுள்ளார்.

முறையான எந்த சோதனையும் நடத்தப்படாமல் சந்திரயான் இரண்டாவது திட்டம் அமல்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவன் இஸ்ரோ தலைவரான பிறகும் Vikram Sarabhai விண்வெளி மைய டைரக்டர் பதவியை தனக்கு தர முன்வரவில்லை என்றும் தான் அது குறித்து சிவனிடம் கேட்ட போதும், தனக்கு முறையாக பதில் அளிக்கவில்லை என்றும் சோம்நாத் குற்றம் சாட்டியுள்ளார்.

இஸ்ரோ முன்னாள் தலைவர் பி.என். சுரேஷ் , இந்த விவகாரத்தில் தலையிட்ட பின்னரே தனக்கு விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குநர் பதவியை சிவன் தனக்கு விட்டு கொடுத்ததாகவும் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

அதோடு, இஸ்ரோ தலைவராக இருந்த சிவன், அவருக்கு பின் தான் இஸ்ரோ தலைவராவதை தடுக்கும் வகையில், மீண்டும் பதவி நீட்டிப்பு கேட்டதாகவும் சோம்நாத் கூறியுள்ளார்.

இது குறித்து கே. சிவன் கருத்து தெரிவிக்கையில், தான் அந்த புத்தகத்தை படிக்கவில்லை என்றும் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் பதில் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments