கர்நாடகா முதலமைச்சராக, தானே 5 ஆண்டுகள் நீடிப்பேன் என்று சித்தராமையா கூறியதால் காங்கிரசில் சலசலப்பு
கர்நாடகா முதலமைச்சராக, தானே 5 ஆண்டுகள் நீடிப்பேன் என்று சித்தராமையா கூறியதை அடுத்து அம்மாநில காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளன.
சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகிப்பார்கள் என்று நம்பப்பட்ட நிலையில், சித்தராமையா கருத்தால் காங்கிரசில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும் மாநில அமைச்சருமான பிரியங்க் கார்கே , முதலமைச்சர் பொறுப்பை ஏற்குமாறு மேலிடம் தம்மை கேட்டுக்கொண்டால் சம்மதம் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
இதனிடையே, முதலமைச்சர் ஒருவர் இருக்கும்போது அந்த பதவியை பற்றி பேசுவது நாகரிகம் அல்ல என்று கர்நாடகா அமைச்சர் தினேஷ் குண்டுராவ் விமர்சித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து யாரும் பேசக்கூடாது என்று காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டதை அவர் நினைவு கூர்ந்தார்.
Comments