தங்கத்துக்காக ஜாமீனில் கையெழுத்திட மறுத்தவர்கள்.. டிடிஎப் வாசனுக்கு தாயே துணை..! வெள்ளை வேட்டி சட்டையுடன் ரிலீஸ்
உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தாலும் ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட பலரும் மறுத்ததால், கூடுதலாக 2 தினங்கள் சிறையிலேயே இருந்த டிடிஎப் வாசனுக்கு அவரது தாயும் , சித்தியும் கையெழுத்திட்டு வெளியே அழைத்து வந்தனர்
ஒரு காலத்தில் நின்றால் அலப்பறை..!. பைக் ஓட்டினால் பாளோயர்ஸ் மாநாடு..! படுத்தால் பரிதாப்பட பெருங்கூட்டம் என்று சமூக வலைதளத்தில் ஓகோவென வாழ்ந்தவர் பைக் யூடியூப்பர் டிடிஎப் வாசன்..!
காஞ்சிபுரம் அடுத்த பாலுச்செட்டி சத்திரம் அருகே தனது ஹயபுசா பைக்கில் அதிவேகத்தில் வீலிங் செய்ய முயன்று குப்புறக்கா விழுந்து... குட்டிக்கரணம் அடித்த சம்பவத்தில் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினாலும், இந்த விபத்து வழக்கில் கைது செய்யப்பட்டு 40 நாட்களுக்கு மேலாக சிறையில் தவித்து வந்த டிடிஎப் வாசனுக்கு தொடர் முயற்சியின் பயனாக கடந்த செவ்வாய் கிழமை தான் ஜாமீன் கிடைத்தது. ஜாமீன் கிடைத்தாலும் அவரது ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட எவரும் முன்வராத நிலையில் டி.டி.எப் வாசனின் தாயும் , சித்தியும் அவரது ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட்டு வாசனை புழல் ஜெயிலில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்
தாயை விட்டு தனியாக நடந்து வந்த டிடிஎப் வாசன், நான் என்ன சொன்னாலும் தப்பாதான் போட போகிறீர்கள் என்று கூறிக்கொண்டே நடையை கட்டினார்
காரின் அருகில் சென்றதும் தாயை காருக்கு ஏற சொல்லிவிட்டு தனது கூட்டாளி பைக் ரைடர் மற்றும் மஞ்சள் வீரர் இயக்குனருடன் செய்தியாளர்களை சந்தித்தார். தனக்கு கை முறிந்திருந்தாலும் சிறைவாசிகள் தன்னை குளிப்பாட்டி தலை துவட்டி விட்டதாக கூறிய டிடிஎப் வாசன், தனக்கு பைக் ஓட்ட 10 வருடம் தடை விதித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார் ?
அருகில் நின்ற மஞ்சள் வீரன் பட இயக்குனர் செல்அம், பெரியார் பிறந்த நாளில் அண்ணா பிறந்த மண்ணில் விழுந்த தம்பி டிடிஎப் வாசன் டாப்பாக வருவார் என்று பஞ்சடித்தார்
பின்னர் தனது தாயுடன் காரில் ஏறி புறப்பட்டார் டிடிஎப் வாசன்.
Comments