போர் சூழலுக்கிடையே மீண்டும் இஸ்ரேல் சென்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன்
போர் சூழலுக்கு இடையே மீண்டும் இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு, குடிநீர், உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய காசா மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த அவர் வலியுறுத்தினார்.
இஸ்ரேல் புறப்படுவதற்கு முன்பு தங்களை தற்காத்துக்கொள்ள அந்நாடு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுக்க முடியாது என தெரிவித்த பிளிங்கன், அதேநேரம் காசாவில் உள்ள அப்பாவி மக்களை பாதுகாக்கும் கடமையும் அமெரிக்காவுக்கு இருப்பதாக தெரிவித்தார்.
Comments