ராஜஸ்தானில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு - ராஜஸ்தான் முழுவதும் அமலாக்கத் துறை சோதனை
ராஜஸ்தானில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி நடைபெற்றதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் 25 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பொது சுகாதாரப் பொறியியல் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் சுபோத் அகர்வால் உள்ளிட்ட பல்வேறு ஐஏஎஸ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் இச்சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஜல் ஜீவன் திட்டத்தில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் கிரோடி லால் மீனா அளித்த புகாரின் அடிப்படையில் ராஜஸ்தான் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
அந்த வழக்கைத் தொடர்ந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் இந்தச் சோதனையை நடத்தி வருகின்றனர். பொறியாளர்கள், கான்ட்ராக்டர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
Comments