ஹமாஸ் கட்டுப்பாட்டிலிருந்து காசாவை விடுவிப்பதே போரின் இலக்கு - இஸ்ரேல்
ஹமாஸ் உடனான போர் தற்காப்புக்கான போர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேட்டியளித்துள்ள இஸ்ரேல் வெளியுறவு செய்தி தொடர்பாளர் லியோர் ஹையாத், தனது இருப்பை தக்க வைப்பதற்கான போராட்டத்தில் இஸ்ரேல் உள்ளதாக கூறினார்.
ஹமாஸ் கட்டுப்பாட்டிலிருந்து காசாவை விடுவிப்பதும், ஹமாஸ் பயங்கரவாதத்தை முழுவதும் அகற்றுவதுமே, இந்த போரில் இஸ்ரேலின் இலக்கு என்று தெரிவித்தார்.
அக்டோபர் 7 போன்ற அதிரடி தாக்குதலை, இஸ்ரேல் மீது மீண்டும் நடத்த ஹமாஸ் திட்டமிட்டு வருவதாகவும், இதனை ஹமாஸ் தலைமையே தெரிவித்துள்ளதாகவும் லியோர் ஹையத் கூறினார்.
Comments