சபரி மலை சீசனை முன்னிட்டு தற்காலிக கடைகளை ஏலம் விட முடிவு... திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஏலம் ரத்து
சபரி மலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் தற்காலிக கடைகளை ஏலம் விடும் விவகாரத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த பேரூராட்சி தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற மன்ற கூட்டத்தின் போது 350 தற்காலிக கடைகளை ஏலம் விட பேரூராட்சி தலைவர் ஸ்டீபன் முன்மொழிந்த போது, கடைகளை 2 பேர் மட்டுமே ஏலம் எடுத்து கூடுதல் விலைக்கு கை மாற்றிவிடுவதாகவும், நீதிமன்றம் ஏற்கனவே ஏலம் விட தடை விதித்துள்ளதாகவும் கூறி திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏலம் விடுவது ரத்து செய்யப்பட்டு ஒரு வாரம் ஆகியும் தீர்மான புத்தகத்தில் அதை பதிவு செய்யாததை கண்டித்துத் திமுக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments