தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் சிலை திறந்து வைத்தார் முதலமைச்சர்

0 1182

கடலூரில் உள்ள காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் உருவச் சிலையை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சார்பில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் பல்நோக்கு உள்விளையாட்டரங்கம் உள்ளிட்ட ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 23 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டமைப்புகளை திறந்து வைத்து, தென்காசியில் அமையவுள்ள மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டும் பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் ஆவணத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments