நாடாளுமன்ற லாகின் ஐ.டி கடவுச்சொல்லை தொழிலதிபருடன் பகிர்ந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா
நாடாளுமன்ற இணையதளத்துக்கான தனது பிரத்யேக லாகின் ஐ.டி.யின் கடவுச் சொல்லை, துபாய் தொழிலதிபர் தர்ஷன் ஹீராநந்தானியுடன் பகிர்ந்து கொண்ட விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.
முன்னதாக, தனது கடவுச் சொல்லை நட்பு ரீதியில் தொழிலதிபர் ஹீராநந்தானியுடன் பகிர்ந்து கொண்டதை ஒப்புக்கொண்ட அவர், அதற்காக பணமோ, அன்பளிப்போ பெறவில்லை என்று தெரிவித்திருந்தார்.
தனது லாகின் கடவுச் சொல்லை பயன்படுத்தி தொழிலதிபர் தர்ஷன் ஹீராநந்தானி எழுப்பியது தனது கேள்விகளே என்றும் மஹுவா மொய்த்ரா குறிப்பிட்டிருந்தார்.
Comments