தமிழ்நாட்டில் 8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டில் 8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, மின்சார வாகன உதிரி பாகங்கள், காலணி, விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை, கண்ணாடி பொருட்கள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு போன்ற துறைகளில் 8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த நிறுவனங்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோவை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளதாகவும், இதற்காக 7 ஆயிரத்து 108 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாகக் கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இதன் மூலம் 22 ஆயிரத்து 536 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
Comments