158 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி கண்டுள்ள சேலம் மாநகரம்... அடுத்து ஸ்மார்ட் சிட்டியாக உருவெடுத்து வருகிறது
சேலம் நகராட்சி உருவாக்கப்பட்டு இன்று 158-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தற்போதைய சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களும் ஒருங்கிணைந்து சேலம் மாவட்டமாக இருந்த போது, 1866-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி உருவாக்கப்பட்டது, சேலம் நகராட்சி.
அதன் முதல் நகராட்சி தலைவராக ராஜாஜி இருந்துள்ளார். கடந்த 158 ஆண்டுகளில் சேலம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறுகின்றனர், அந்நகர வாசிகள்.
தமிழகத்திலேயே முதன் முறையாக இரண்டு அடுக்கு பேருந்து நிலையம், இரண்டடுக்கு மேம்பாலம் போன்றவை சேலத்தில் இடம் பெற்றுள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேலும் பல திட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவிலேயே முதன் முறையாக மதுவிலக்கு கொண்டு வரப்பட்ட சேலத்தில் தான் காலத்தால் அழியாத பல திரைக்காவியங்களை உருவாக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் செயல்பட்டது.
இரும்பாலை, ராமானுஜர் மணி மண்டபம், 1008 சிவாலயம், திப்புசுல்தான் காலத்து ஜாமியா மசூதி, குழந்தை இயேசு பேராலயம் போன்றவையும் சேலத்தின் பன்முகத்தன்மைக்கு அடையாளங்கள்.
Comments