மும்பையில் ஜியோ வேர்ல்டு பிளாசா தொடக்க விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்ற முகேஷ் அம்பானி

0 15961

ரிலையன்ஸ் குழுமம் தொடங்கியுள்ள ஜியோ வேர்ல்டு பிளாசாவில் இன்று முதல் விற்பனை தொடங்குகிறது.

மும்பையில் பாந்த்ரா-குர்லா வளாகத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த வணிக நிறுவனத்தில், உலகளவில் பிரபலமான 66 ஆடம்பர பிராண்டுகளின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

நேற்று நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, மனைவி நீத்தா அம்பானி மற்றும் அவர்களின் குடும்பத்தினரும், தீபிகா படுகோன், ஆலியா பட்  கத்ரினா கைப், ஜெனிலியா உள்ளிட்ட  பாலிவுட் நட்சத்திரங்களும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசி முகேஷ்அம்பானியின் மகள் ஈஷா அம்பானி, உலகின் சிறந்தவற்றை இங்கு கொண்டு வரவும், இந்தியாவின் சிறந்தவற்றை உலகிற்கு கொண்டு செல்லவும் தமது தாயார் நீத்தாவின் கனவுத்திட்டம் நனவாகியிருப்பதாகவும், இது உலகிலேயே மிகச்சிறந்த வணிகவளாகமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments