9 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ. 4,77,855 கோடி நேரடி நிதி வழங்கியது -அண்ணாமலை
தாங்கள் அனுப்பும் கோப்புகளில் கையெழுத்திட மறுக்கிறார் என்று கூறி ஆளுநரை பூதம் போல காட்ட தி.மு.க.வினர் முயற்சிப்பதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் 51-வது நாள் என் மண் என் மக்கள் யாத்திரையின் இறுதியில் பேசிய அண்ணாமலை, ஆளுநர் கையெழுத்திடவில்லை என்று கூறப்படும் கோப்புகள் அனைத்தும் தி.மு.க.வினர் தங்கள் சுயலாபத்துக்காக அனுப்பியவை என்றார்.
கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு 4 லட்சத்து 77 ஆயிரத்து 855 கோடி ரூபாயை நேரடி நிதியாக வழங்கி உள்ளதாகவும், இது முந்தைய காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சியை விட 350 சதவீதம் அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தாம் கூறியதைப் போல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், அதே போன்று தி.மு.க. அரசு வேலை வழங்காதது ஏன் என்று வினவியுள்ளார்.
Comments