அரவிந்த கெஜ்ரிவால் ஒரு வேளை கைது செய்யப்பட்டால் என்ன செய்வது..? ஆலோசித்து வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள்
அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் ஒரு வேளை கைது செய்யப்பட்டால் என்ன செய்வது என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலை நாளை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசின் அமைச்சர் சவுரப் பரத்வாஜ், கெஜ்ரிவால்தான் எங்கள் தலைவர் அவர் தலைமையின் கீழ் பணியாற்றுவோம் என்று தெரிவித்தார். மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் மறுப்பதும் கெஜ்ரிவாலை கைது செய்ய முயற்சிப்பதும் ஆம் ஆத்மியை அழிக்கும் அரசியல் ரீதியான முயற்சி என்றும் ஆம் ஆத்மி அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார்.
Comments