இந்தியா-வங்காள தேசத்துக்கான 3 புதிய திட்டங்களை இன்று ஷேக் ஹசீனாவுடன் சேர்ந்து தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடியும் வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இந்தியா-வங்காள தேசத்துக்கான மூன்று புதிய திட்டங்களை இன்று தொடங்கி வைக்கின்றனர்.
இதில் இரண்டு ரயில்வே பாதைகள் மற்றும் ஒரு அனல் மின் நிலையம் ஆகியவற்றை இருநாட்டு தலைவர்களும் இன்று காலை 11 மணிக்கு காணொளி வாயிலாகத் தொடங்கி வைக்கின்றனர்.
இருநாட்டின் எல்லைத்தாண்டிச் செல்லும் அகுவாரா- அகர்தாலா ரயில் இணைப்பு மற்றும் குல்னா-மோங்கலா துறைமுக இணைப்பு ரயில் பாதை ஆகியவை இன்று தொடங்கி வைக்கப்படுகின்றன. அகுவாரா-அகர்தாலா ரயில் பாதை இந்திய அரசின் 392 கோடி ரூபாய் பங்களிப்புடன் தொடங்கப்படுகிறது.
இதே போல் துறைமுகங்கள் இணைப்பு ரயில் பாதைக்கு இந்தியாவின் கணிசமான நிதி உதவியுடன் மொத்தம் 399 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வங்காள தேசத்தின் ராம்பால் பகுதியில் அமைய உள்ள அனல்மின்நிலைய இரண்டாவது உலை மூலமாக ஆயிரத்து முந்நூறு மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.இதற்கான திட்ட மதிப்பீடு 1 புள்ளி 6 பில்லியன் டாலராகும்..
Comments