புதிய மாடல் மேக்புக் புரோவை அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம் இன்டெலுக்கு பதிலாக ஆப்பிள் எம்-3 சிப்கள்

0 996

புதிய மாடல் மேக்புக் புரோ  மற்றும் ஐ-மேக் கணிணிகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை இன்டெல் சிப்-கள் அதில் பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில், முதன்முறையாக ஆப்பிள் சொந்தமாக தயாரித்த எம்-3 சிப்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதனால் பழைய மாடல்களுடன் ஒப்பிடுகையில் புதிய மாடல் மேக்புக் புரோ-வின் செயல்திறன் 11 மடங்கு அதிகமாக இருக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

14 மற்றும் 16 இன்ச் திரைகளுடன், எம்-3, எம்-3 புரோ மற்றும் எம்-3 மேக்ஸ் என 3 ரகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வகை மேக்புக் புரோ-வின் விலை ஒரு லட்சத்து 70 ஆயிரம் முதல் மூன்றரை லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் நடைபெற்ற அறிமுக விழா, ஐ-போன் 15 புரோ மேக்ஸில் படம் பிடிக்கப்பட்டு மேக்-கில் எடிட் செய்யப்பட்டதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments