உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி தீபாவளி பண்டிகை பட்டாசு வெடிப்பு நேரம்விரைவில் அறிவிக்கப்படும் : அமைச்சர் மெய்யநாதன்
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் உள்ளிட்ட வழிகாட்டுதலை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் வெளியிடும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பேரவை துவக்க விழாவில் பங்கேற்ற சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், பசுமை பட்டாசுகள் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்பதால், மக்கள் பசுமை பட்டாசுகளை வெடிக்க ஆர்வம் காட்ட வேண்டும் என கூறினார்.
சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளை பசுமை பட்டாசுகளாக தயாரிக்க படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
Comments