1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற இலக்கை 2030-க்குள் தமிழகம் எட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1043

"2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற இலக்கை தமிழ்நாடு அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்லாவரத்தில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட்  குழுமத்தின் சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைத்துப் பேசிய முதலமைச்சர், 5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டிருக்கின்ற இந்த தொழில்நுட்பப் பூங்காவில், 50 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரிகிற அளவுக்கான உலகத்தரம் வாய்ந்த அலுவலக இடங்கள் கட்டித்தர நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

மாநிலத்தில் இருக்கின்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களிலும் 9 நியோ டைடல் பார்க்குகள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments