52 நாட்களுக்கு பிறகு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து சிறையில் இருந்து வெளியே வந்தார் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
ஆந்திர உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, 52 நாட்களுக்கு பிறகு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
371 கோடி ரூபாய் மதிப்பிலான திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைந்தப்பட்டிருந்த அவருக்கு மருத்துவ காரணங்களுக்காக நான்கு வார இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
சிறையில் இருந்து வெளியே வந்தவருக்கு தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
தொண்டர்கள் மத்தியில் பேசிய சந்திரபாபு நாயுடு, தமது 45 ஆண்டு கால பொது வாழ்வில் தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் தம்மைச் சார்ந்த யாரையும் தவறு செய்ய அனுமதித்ததில்லை என்றும் கூறினார்.
Comments