குஜராத்தில் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணம்... பனஸ்கந்தாவில் உள்ள அம்பாஜி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

0 942

நிலையான ஆட்சி அமைந்திருப்பதே நாடு விரைவான வளர்ச்சி அடைந்து வருவதற்கும், உலகம் முழுவதும் இந்தியாவை பாராட்டுவதற்கும் காரணம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் மெசானாவில் 5 ஆயிரத்து 950 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர், தாம் அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தையும் கண்டிப்பாக நிறைவேற்றி வருவதாக கூறியுள்ளார்.

முன்னதாக, நிகழ்ச்சி நடைபெற்ற குஜராத்தில் மேற்கொள்ளும் 2 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக பனஸ்கந்தாவில் உள்ள அம்பாஜி கோயிலிலும் பிரதமர் வழிபாடு நடத்தினார்.

இடத்துக்கு காரில் சென்ற பிரதமர் மோடிக்கு சாலையின் இரு மருங்கிலும் திரண்ட மக்கள் மலர்களை தூவி வரவேற்பு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments