இந்தியா- வங்காள தேசத்துக்கான ரயில் பாதை இணைப்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடியும் வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இந்தியா- வங்காள தேசத்துக்கான ரயில் பாதை இணைப்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களை நவம்பர் முதல் தேதி காணொளி வாயிலாகத் தொடங்கி வைக்க உள்ளனர்.
15 கிலோமீட்டர் நீளமுடைய அகௌரா-அகர்தலா புதிய ரயில் பாதை 5 கிலேமீட்டர் இந்தியாவில் இருக்கும் மற்றும் 10 கிவோமீட்டர் வங்கதேசத்தில் இருக்கும். இந்த திட்டம் -- இரு நாடுகளுக்கு இடையே பயணிகள் மற்றும் சரக்கு பரிமாற்றத்திற்காக வடிவமைக்கப்பட்ட இரட்டை ரயில் பாதையாகும்.
இப்பாதை வடகிழக்கு மாநிலங்கள், குறிப்பாக திரிபுரா, மற்றும் அஸ்ஸாமின் தெற்கு பகுதி மற்றும் மிசோரம் ஆகியவற்றில் வசிப்போர் கொல்கத்தா செல்ல பயன்படுகிறது. இதனால் தற்போதைய 38 மணி நேரப் பயணத்தில் 22 மணி நேரம் மிச்சமாகும். மேலும் 2 பில்லியன் டாலர் மதிப்பில் மைத்ரீ சூப்பர் தெர்மல் பவர் திட்டத்தில் தலா 560 மெகாவாட் இரண்டு அலகுகள், பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் மூலம் கட்டப்பட்டு வருகிறது.
Comments