உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியா மாறி வருகிறது - பிரதமர் மோடி
பண்டிகை காலங்களில் உள்ளூர் தயாரிப்பு பொருட்களை வாங்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வானொலி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், 10 ஆண்டுகளுக்கு முன்புவரை வருடந்தோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகி வந்த காதி பொருட்கள், நடப்பு ஆண்டில் 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக கூறினார்.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான அக்டோபர் 31-ம் தேதி, தேசத்தைக் கட்டமைக்கும் பணியில் இளைஞர்கள் தீவிரமாகப் பங்கேற்கும் வகையில் 'மை யங் இந்தியா' என்ற இயக்கம் தொடங்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.
முண்டா பழங்குடியினத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரான பிர்சா முண்டாவின் பிறந்தநாளான நவம்பர் 15-ம் தேதி, பழங்குடியினரின் பெருமை தினமாக, நாடு முழுவதும் கொண்டாடப்படும் என்று அவர் கூறினார்.
Comments