திருநெல்வேலி மேலநத்தம் பகுதியில் கழிவு நீர் கலந்து சாக்கடையாக ஓடும் தாமிரபரணி ஆறு

0 1792

ஐந்து மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக பயன்படும் தாமிரபரணி ஆறு கழிவுநீர் கலந்து கருப்பு நிறத்தில் ஓடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து புன்னக்காயில் வரை பல்வேறு இடங்களில் தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பதாக தெரிவித்துள்ள மக்கள், தாமிரபரணி நதியே சாக்கடை ஆறு போல ஓடுவதற்கு மேலப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து பாளையங் கால்வாய்க்கு வரும் கழிவு நீர் மேலநத்தம் பகுதியில் நேரடியாக கலப்பதே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆற்றில் கழிவு நீர் கலப்பது குறித்து, உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தாமிரபரணி நதி மாசுபடுவதால் விநாயகர் சிலைகளை கரைக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை சுட்டிக்காட்டிய அப்பகுதி மக்கள், சாக்கடை நீர் கலப்பதால் நதி மாசுபடாதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

கருப்பாக ஓடும் தாமிரபரணி ஆற்றில் கரையில் நெல்லை மாநகராட்சி ஆணையர், கோட்டாட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments