அம்பத்தூரில் போலீசாரைத் தாக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் சம்பவம் தொடர்பாக 33 பேர் போலீசார் கைது
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் போலீசாரைத் தாக்கியதாக மேலும் 28 வடமாநிலத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் பேரல்கள் தயாரிப்பு நிறுவனத்தில் ஆயுதபூஜையன்று, வடமாநிலத் தொழிலாளர்களுக்குள் மதுபோதையில் மோதல் ஏற்பட்டது.
இது குறித்து விசாரிக்கச் சென்ற போலீசாரை வடமாநிலத் தொழிலாளர்கள் விரட்டி விரட்டித் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகின.
தாக்குதல் தொடர்பாக முதலில் 5 பேரை கைது செய்த போலீசார், தற்போது மேலும் 28 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
Comments