மேட்டூர் கட்லா, ரோகு , மிர்கால் , சேல் கெண்டை, கல்பாசு போன்ற மீன் குஞ்சுகளை இருப்பு செய்யும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் கே.என் நேரு

0 2458

செயற்கை தூண்டுதல் முறையில் இனப்பெருக்கம் செய்யப்பட்ட ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் மேட்டூர் காவிரி ஆற்றில் விடப்பட்டன.

இயற்கை நீர் நிலைகளில் தாய் மீன்கள் முட்டையிடும் போது வெளிவரும் நுண் மீன் குஞ்சுகள், பிற வகை பெரிய மீன்களால் உண்ணப்படுவதால், குறிப்பிட்ட சில மீன் இனங்கள் அழியும் அபாயம் உள்ளது.

இதனை தவிர்த்து நாட்டு இன மீன்களை பாதுகாக்கும் வகையில், காவிரி, தென்பெண்ணை, பவானி, தாமிரபரணி, வைகை, வெண்ணாறு, வெட்டாறு, அமராவதி உள்ளிட்ட ஆறுகளில் இருந்து தாய் மீன்களை பாதுகாப்பாக உயிருடன் சேகரித்து, அரசு மீன் குஞ்சு உற்பத்தி நிலையங்களில் தூண்டுதல் முறையில் மீன் குஞ்சுகள் பொறிக்கச் செய்யப்படுகிறது.

அவ்வாறு செயற்கை தூண்டுதல் முறையில் பொறித்து, 80 மில்லி மீட்டர் முதல் 100 மில்லி மீட்டர் அளவில் வளர்ந்த விரலி மீன் குஞ்சுகளை மேட்டூரில் நான்கு ரோடு அனல் மின் நிலைய பாலபகுதியில் அமைச்சர் கே என் நேரு  காவிரி ஆற்றில் விடுவித்தார்.

சேல் கெண்டை, கல்பாசு, கட்லா ரோகு, மிருகால் ஆகிய வகைகளைச் சேர்ந்த ஒரு லட்சம் மீன் விரலிகள் முதல் கட்டமாக விடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments