கியூபாவில் தேசிய பாலே நடனப் பள்ளியின் 75வது ஆண்டு விழா
கியூபாவில் தேசிய பாலே நடன பள்ளியின் 75வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் ஹவானாவில் செயல்படும் அப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்வான் லேக் வடிவில் நடன மங்கைகள் ஆடி பார்வையாளர்களை அசத்தினர்.
இத்தாலியில் உருவான பாலே நடனம், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பரவி கியூபாவையும் சென்றடைந்தது.
கியூபாவில் தேசிய பாலே நடன பள்ளியை நிறுவிய அலிசியா அலன்சா, பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளி ஆவார்.
தமது ஆயுள்காலமான 98 வயது வரை பள்ளியை திறம்பட நடத்திய அவருக்கு பாலே வாயிலாகவே மரியாதை செலுத்தப்பட்டது
Comments