தாய்லாந்து நாட்டு விடுதியில் ஹாலோவீன் கொண்டாட்ட ஏற்பாடு... மூளை கேக்குகள், ஐபால் மில்க் ஷேக் என பல வடிவத்தில் உணவுகள்

0 1077

ஹாலோவீன் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தாய்லாந்து நாட்டு உணவு விடுதியில், மூளை கேக்குகள், கண் கருவிழி மில்க் ஷேக் போன்ற அச்சமூட்டும் தோற்றம் கொண்ட உணவுகளை பரிமாறி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.

உணவு விடுதியின் வரவேற்பாளர், பணியாளர் அனைவரும் பேய் வேடமிட்டு வாடிக்கையாளர்களுக்கு வித்யாசமான அனுபவத்தை வழங்கினர். பேய் வேடமிட்டு பணிப்பெண்கள் வாடிக்கையாளர் முன்பு திடீரென தோன்றி வியப்பளித்தனர்.


சாத்தான் பொம்மைகளும் விடுதியில் சகஜமாக சுற்றித் திரிந்தன. தவளை, நத்தை, பல்லி, பாம்பு, அட்டை பூச்சி வடிவங்களில் இனிப்புகள் பரிமாறப்பட்டன.

ஹாலோவீன் தினத்தின் போது மண்ணுலகத்துக்கும், இறந்தவர்களின் ஆன்மா வாழும் உலகத்துக்கும் இடையேயான எல்லை காணாமல் போவதாக நம்பப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் வரும் 31-ஆம் தேதி ஹாலோவீன் கொண்டாடப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments