ஓட ஓட விரட்டித் தாக்கப்பட்ட போலீசார் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதி! வெளிமாநிலத் தொழிலாளர்களின் அட்டூழியம்!

0 2620

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் வடமாநில தொழிலாளர்களுக்குள் ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற போலீசார் தாக்கப்பட்ட விவகாரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர் உரிமைச் சட்ட விதிகளின்படி தமிழகத்தில் பணியாற்ற வரும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

காக்கி சீருடையில் இருந்த காவல்துறையினர் இருவர் தலைதெறிக்க ஓடுவதும், பீகாரை சேர்ந்த இளைஞர்கள் கையில் கட்டை இரும்பி கம்பிகளோடு விரட்டுவதும், சீருடையில் இருந்த முதல்நிலை காவலர் ஒருவர் தாக்கி விரட்டப்படுவதும் என இந்த பதறவைக்கும் வீடியோ காட்சிகள் சென்னை பட்டரவாக்கம் பகுதியில் நடைப்பெற்றவை.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரவாக்கம் சாலையில் ப்ளூ பேக்கேஜ் என்ற தனியார் தொழிற்சாலை உள்ளது. பிளாஸ்டிக் பேரல்களை தயார் செய்து ஏற்றுமதி செய்யும் இந்த தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்கி பணியாற்றி வருகின்றனர். கடந்த 23 ஆம் தேதி இரவு ஆயுத பூஜைக்காக தொழிலாளர்களுக்கு உரிமையாளர் ஊக்கத்தொகை கொடுத்துள்ளார். மறுநாள் விடுமுறை என்பதால் தொழிலாளர்கள் அனைவரும் மது அருந்தியுள்ளனர். அப்பொழுது தொழிலாளர்கள் தங்கக்கூடிய அறை தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

போதையில் தகாத வார்த்தைகள் பேசி ஒருவருக்கு ஒருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து வந்த ரோந்துக் காவலர் ரகுபதி, ராஜ்குமார், வாசிம் ஆகியோர் தொழிற்சாலை உள்ளே சென்று ஏன் தகராறு செய்கிறிர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளனர். அப்பொழுது ஒரு நபர் ரத்தகாயத்தோடு தொழிற்சாலை உள்ளே கிடப்பதை பார்த்த தொழிலாளர்கள் சிலர் போலீசார்தான் தாக்கியதாக நினைத்து போலீசாரை கட்டை மற்றும் கம்பிகளால் தாக்கத் தொடங்கியுள்ளனர்.

50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கும்பலாக தாக்கத் தொடங்கியதால் காவலர்கள் ராஜ்குமார், வாசிம் ஆகிய இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு தப்பியோட, அவர்களை அந்தக் கும்பல் விரட்டிக்கொண்டே சென்றது.

இதனையடுத்து தங்களிடம் தனியாக சிக்கிய முதன்மைக் காவலர் ரகுபதி என்பவரை அந்தக் கும்பல் தாக்கத் தொடங்கியது. கையில் அவர்கள் கட்டை, இரும்புக் கம்பிகளை வைத்திருந்ததால் ரகுபதியும் வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்ப முயன்றார். அப்போது அவரது தலையிலும் முதுகிலும் தாக்கிய பீகார் தொழிலாளர்கள், வாகனத்தை நோக்கி கற்களையும் கையில் கிடைத்த பொருட்களையும் வீசினர்.

இந்தத் தாக்குதலில் முதன்மைக் காவலர் ரகுபதியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஒருவழியாகத் தப்பி காவல் நிலையம் வந்தவரை சக காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் வீடியோக்களை ஆதாரமாகக் கொண்டு 10 பேரை கைது செய்த போலீசார், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடுதல், ஆபாசமாகப் பேசுதல் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments