தமிழக ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் தாயாரிடம் போலீஸார் விசாரணை
தமிழக ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்தின் தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தேனாம்பேட்டை எஸ்.எம். நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற போலீசார், சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு கருக்கா வினோத் யாருடன் தொடர்பில் இருந்தார் என்ற விவரங்களை கேட்டதாக தெரிகிறது. விநோத்தின் சகோதரர் முனியாண்டியிடமும் போலீசார் விவரங்களை கேட்டறிந்தனர்.
Comments