தமிழகத்திலுள்ள 540 ஜாதிகளின் நிலையை அறியவே கணக்கெடுப்பு கேட்கிறோம் - அன்புமணி
ஜாதி என்று சொன்னாலே கெட்ட வார்த்தை போல் பார்க்கிறார்கள் எனவும் ஜாதி வாரி கணக்கெடுப்பு என்றால் அதை வைத்து அரசியல் செய்வதாக நினைக்கிறார்கள் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து சென்னை தியாகராய நகரில் பா.ம.க சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பேசிய கட்சித் தலைவர் அன்புமணி, தமிழ்நாட்டில் உள்ள 540 ஜாதிகளின் நிலையையும் அறிந்து கொள்ள தான் ஜாதி வாரி கணக்கெடுப்பு கேட்கிறோம் என கூறினார்.
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு உடன் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அப்போதைய மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதி அளித்ததாக பேசிய அன்புமணி, எங்களால் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று சொல்பவர்கள் எதற்கு சமூகநீதியை பற்றி பேச வேண்டுமெனவும் கேள்வி எழுப்பினார்.
ஐடி நிறுவனங்கள் கட்டினால் தமிழ்நாடு முன்னேறி விடாது என்றும் பின் தங்கிய மக்களை முன்னேற்றி விட்டால் தான் தமிழ்நாடு முன்னேறும் என்றும் அன்புமணி கருத்து தெரிவித்தார்.
Comments