மழை பெய்யாததிற்கோ, ஆற்றில் தண்ணீர் இல்லாததற்கோ நான் என்ன செய்ய முடியும் -திருவாரூர் ஆட்சியர்

0 3572

மழை பெய்யாததிற்கோ, ஆற்றில் தண்ணீர் இல்லாததற்கோ நான் என்ன செய்ய முடியும்...?வேண்டுமென்றால் எனது சம்பளத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என விவசாயிகளிடம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பேசிய விவசாயிகள், குறுவை சாகுபடி பொய்த்து விட்டதால், சம்பா சாகுபடி செய்வதா வேண்டாமா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தினர்.

மின்மோட்டார் மூலமாக தண்ணீர் இறைத்தால் மாதம் 60 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருப்பதால், பயிர் செய்யாமல் இருக்க ஏக்கருக்கு 25 ஆயிரம் தர வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயிகள் நிலை குறித்து தன்னால் அரசுக்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும் எனக் கூறி மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ சமாதானப்படுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments