பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஆளுநரை ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து சென்னை மாநகரக் காவல் ஆணையர் விளக்கம்

0 1573

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து சென்னை மாநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விளக்கமளித்தார்.

ஆணையருடன் சட்டம் ஒழுங்கு மற்றும் நுண்ணுறிவு பிரிவு அதிகாரிகளும் ஆளுநரை சந்தித்தனர். சுமார் 40 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின்போது, கைது செய்யப்பட்ட நபர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

ஆளுநர் மாளிகைக்கு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், காவல் துறையினர் விழிப்புடன் இருந்ததாலேயே உடனடியாக அந்த நபரை மடக்கிப் பிடித்து குற்ற சம்பவம் முறியடிக்கப்பட்டது எனவும் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார் என கூறப்படுகிறது.

குடியரசு தலைவர் வருகையை ஒட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆளுநரிடம் விளக்கம் அளித்ததாகவும் தெரிகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments