தியாங்காங் விண்வெளி நிலைய பணிகளுக்காக ஷென்ஜோ-17 விண்கலம் மூலம் 3 வீரர்களும் விண்வெளிக்கு அனுப்பிய சீனா

0 1724

விண்வெளியில் தாங்கள் கட்டமைத்து வரும் தியாங்காங் விண்வெளி நிலைய பணிகளுக்காக 3 வீரர்களை சீனா விண்ணுக்கு அனுப்பியுள்ளது. ஜியுகுவான் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 2எஃப் ராக்கெட் மூலம், ஷென்ஜோ - 17 விண்கலத்தில் அவர்கள் விண்வெளிக்கு சென்றனர்.

தியாங்காங் விண்வெளி நிலையத்தை மேம்படுத்தும் பணிக்காக சுழற்சி முறையில் சீனா வீரர்களை அனுப்பிவருகிறது. தற்போது அனுப்பப்பட்டுள்ள 3 வீரர்களும், சுமார் 6 மாத காலம் விண்வெளியிலேயே இருந்து பணிகளை மேற்கொள்ள உள்ளனர். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சீனாவின் திட்டத்தில் இது 30-வது பயணமாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments