காசா மீது தரைவழி தாக்குதல் நடத்துவதற்காக ஒருமனதாக முடிவு - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

0 1113

ஹமாஸ் படையை அழிக்க காசா மீது தரைப்படை தாக்குதலை நடத்த இஸ்ரேல் மும்முரமாக தயாராகி வருவதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், இஸ்ரேல் தனது இருப்பை தக்க வைப்பதற்கான போராட்டத்தில் உள்ளதாகவும், தேசத்தை காப்பாற்றுவதே இலக்கு என்றும் கூறினார்.

ஹமாஸை அழிப்பதும், பணயக்கைதிகளை காப்பாற்றுவதுமே போரின் 2 முக்கிய நோக்கங்கள் என்று தெரிவித்தார். தற்போது வரையிலான போரில் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இது ஆரம்பம் மட்டுமே என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments