லீவிஸ்டன் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு - 20-க்கும் மேற்பட்டோர் பலி மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்
அமெரிக்காவின் மெய்னி மாகாணம் லீவிஸ்டன் நகரில் புதன்கிழமை இரவு ஆண் ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
பார், வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி ஓடிய நபரின் பெயர் ராபர்ட் கார்ட் என கண்டுபிடித்துள்ள போலீசார் அவரை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ராபர்ட் கார்டின் புகைப்படம் மற்றும் அவர் பயன்படுத்திய காரின் புகைப்படத்தையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். லீவிஸ்டன் நகரில் கடைகளை அடைக்கவும், மக்கள் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருக்குமாறும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வீட்டின் அருகில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய நிகழ்வுகள் நடந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்குமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Comments